தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இளைஞர்களின் ஆன்மீகப் பாதயாத்திரை இன்று (ஜூலை
காலை பச்சிளைப்பள்ளி பகுதியை வந்தடைந்தது.
இன்றைய தினம் காலை 8:00 மணியளவில் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து ஐந்து இளைஞர்களுடன் இந்த ஆன்மீகப் பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
தொடர்ந்து பயணித்த யாத்திரீகர்கள், காலை 11:00 மணியளவில் பச்சிளைப்பள்ளி, இரட்டைக் கேணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்குப் பச்சிளைப்பள்ளி பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இணைந்துகொண்ட கிளிநொச்சி இளைஞர்கள்:
கிளிநொச்சி மாவட்ட எல்லையை அடைந்ததும், மாவட்ட மக்களின் பாரியளவிலான வரவேற்புடன் பாதயாத்திரை வரவேற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து இளைஞர்கள் இந்த யாத்திரையில் தங்களை இணைத்துக் கொண்டு, கதிர்காமம் நோக்கிய தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர், பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முக்கிய அதிகாரிகள், பச்சிளைப்பள்ளி பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு யாத்திரீகர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
பூ.லின்ரன்
வடமராட்சி, பச்சிளைப்பள்ளி நிருபர்

What’s your Reaction?

