கதிர்காமம் பாதயாத்திரையில் செல்லும் சுப்பிரமணிக்கு( நாய்) யோகட் கொடுக்க வேண்டாம். அத்துடன் அதனை தூக்கி தடவி
அழைய வேண்டாம் என்று
வனஜீவராசிகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வனஜீவராசிகள் திணைக்கள சட்ட ஆலோசகரும்சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்சனி தெரிவிக்கையில்..
இதுவரை சுப்பிரமணிக்கு மூன்று இடங்களில் சோர்ந்து போய் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கின்றது.
இறுதியாக விநாயகபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை நேற்றிரவு சென்றடைந்த பொழுது அங்கும் சுப்பிரமணி மிகவும் சோர்வடைய அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .
இப்பொழுது உகந்த மலையை நோக்கி இறுதி கட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே இதன் பிறகு யோகர்ட் கொடுப்பதையோ அதை தூக்கி அழைவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் நடந்து நடந்து அது களைத்திருக்கிறது. சென்ற இடமெல்லாம் யோகட் பால் வழங்கியதால் சீனியின் அளவு உயர்ந்துள்ளது.ஆதலால் தேக கட்டமைப்பு ஆரோக்கியம் குறைந்துள்ளது.
எனவே இதை தவிர்த்துக் கொண்டால் உகந்த வரைக்கும் அவரது பயணத்தை தொடர முடியும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றார்.
( வி.ரி.சகாதேவராஜா)


