மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலய மாணவர் கௌரவிப்பு நேற்று வியாழக்கிழமை 02.07.2026 காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் யூ.எவ்.எம்.வாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு மற்றும் அல்ஹாஜ் ஏம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.செய்க் எம்.எம்.ஜவாட், மற்றும் காத்தான்குடி நகரசபை நகரபிதா அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலய அதிபர் எஸ்.ஐ.யாஸிர் அரபாத் சிறப்புமிக்க சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் ஆரம்ப நிகழ்வாக ஹிழுறிய்யா வித்தியாலய முன்றலிலிருந்து அதிதிகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புடைசூழ ஆரம்பமாகும் பண்பாட்டுப் பேரணியானது காத்தான்குடி மில்லத் பெண்கள் மகளிர் உயர்தப் பாடசாலை வீதியூடாகப் பயணித்துப் பிரதான வீதியையடைந்து அங்கிருந்து, விழா மண்டபத்தை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிப்பு இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?

