மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுடானான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் பங்குபற்றுதல்களுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பெண் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த அரச உத்தியோகத்தர்கள், பொலீஸ் அதிகாரிகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?

