உள்ளூர் செய்திகள்

சதுரங்கத்தில் சாதனை படைக்கும் யாழ் சிறுமி.

யாழ் இணுவில் கிழக்கை சேர்ந்த செல்வி கஜீனா தர்ஷன் என்ற மாணவி சதுரங்கத்தில் சாதனை படைத்துள்ளார்.

இவர் ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்காக இலங்கை சார்பாக தாய்லாந்து செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வி கஜிஷனா தர்ஷன் என்ற ஏழு வயதான மாணவி யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 02 இல் கல்வி கற்று வருகின்றார்.
குறித்த மாணவி சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை படைத்து வருகின்றார்.

வட மாகாணத்தை சேர்ந்த இந்த சிறுமி தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் வட மாகாணத்திற்கு ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்துள்ளார்
வட மாகாணத்தால் ஒரே ஒரு தங்க பதக்கம் மாத்திரமே வெல்லபட்டது.

இதன் மூலம் தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய இறுதி போட்டியில் இலங்கையின் உத்தியோகபூர்வ வீரராக பங்குபற்றவுள்ளார்.

மேலும் சேர்ஜியாவில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்க போட்டிகளிலும் மற்றும் Fide World cadet போட்டிகளிலும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ வீரராக விளையாடவுள்ளார்.

இன்று வடமாகாணம் மட்டும் அன்றி இலங்கையில் மூன்று வகையான சதுரங்கத்திலும் சிறந்த மதீப்பீட்டு புள்ளியை கொண்டிருக்கும் ஒரே ஒரு சிறுமி இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் Rapit (15+10 sec ) சதுரங்க தரப்படுத்தலில் 1615 புள்ளிகளுடன் உலக அளவில் 4 ம் இடத்தில் உள்ளார்.

இலங்கை ரீதியில் Battle of Mind இல் சாம்பியன் பட்டம், 9 வயதுக்குட்பட்ட பெண்கள் குழு போட்டியில் Board champion   2024 இல், வலய, மாவட்ட, மாகாண போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளார்.

எமது தேசத்தில் இவ்வாறான சிறுவர்கள் உள்ள போதிலும் பல காரணங்களால் வெற்றி எம்மை விட்டு தள்ளிப் போகின்றது.

இச் சிறுமியும் தாய்லாந்து செல்லவும் அதற்குரிய சிறப்பு பயிற்சிகளை பெறவும் தனக்கான SPONSORSHIP னை எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகளை அநுர அரசு இழுத்து பூட்டியது

https://youtu.be/BWcdpjApntY

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp