Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகளை அநுர அரசு இழுத்து பூட்டியது

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகளை அநுர அரசு இழுத்து பூட்டியது

ஜனாதிபதித்தேர்தலின் ஊடாக இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தை அடுத்து, கடந்தகாலத்தில் இயங்கிவந்த உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் தேசிய மக்கள் சக்தி அரசு முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது
நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூல வரைபைத் தயாரிப்பதற்குமென கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகமொன்று நிறுவப்பட்டு இயங்கிவந்தது.
குறித்த பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான போதிய ஆளணியுடன் இயங்கிவந்த இச்செயலகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பிராந்திய மட்ட அதிகாரிகள், புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுமார் 6 மாதங்களுக்கும் மேற்பட்ட காலம் பல சுற்றுக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.

அச்செயலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளிலும், கருத்தறியும் கலந்துரையாடல்களிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெருமளவுக்கு உள்வாங்கப்படவில்லை எனவும், செயலகத்தினால் முன்மொழியப்படும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை வழங்கக்கூடிய பொறிமுறைகள் உள்வாங்கப்படவில்லை எனவும பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் ஓரிரு தினங்களில் புதிய அரசாங்கத்தின் கொள்கைத்தீர்மானத்துக்கு அமைவாக இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதாக அறிவித்து, அச்செயலக ஊழியர்கள் சகலருக்கும் அரசாங்கத்தினால் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டதை அடுத்து, அந்த இடைக்கால செயலகத்தின் பணிகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments