உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 8பேர் கைது 6 பேரின் வயிற்றுக்குள் தங்கக்கட்டிகள்..!

jaffna gold smuggling | Pathivu News

யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை தங்க கட்டிகளை கடத்தி செல்லும் நோக்குடன் தமது உடைமையில் வைத்திருந்த இரண்டு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,

காங்கேசன்துறையில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் நாகப்பட்டணத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை செல்லவிருந்த கப்பலில் பயணிக்க தயாராக 146 பயணிகளில் சிலர் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டுள்ளனர்.

அவர்களை சோதனைக்கு உட்படுத்திய போது இந்திய பிரஜைகளாகிய இருவரின் உடைமையில் இருந்து தலா 100 கிராம் தங்க கட்டிகள் கைபபற்றப்பட்டன. அதனை அடுத்து அவர்கள் இருவரையும் சுங்க பிரிவினர் கைது செய்தனர்.

பயணிகளில் மேலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட 09 இலங்கையர்கள் மற்றும் 17 இந்தியர்களுமான 26 பேரை சுங்க பிரிவினர் கைது செய்தனர்.

தங்க கட்டிகளை உடைமையில் வைத்திருந்த இருவர் மற்றும் சந்தேகத்திற்கு இடமான 26 பேருமாக 28 பயணிகள் தவிர்ந்த ஏனைய 118 பயணிகள் இந்திய நோக்கி பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தங்க கட்டிகளை விழுங்கி கடத்த முற்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகத்தில் 26 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி ஸ்கானிங் செய்ய சுங்க திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 26 பேரில் 17 பேரை பாதுகாப்புடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து ஸ்கானிங் மேற்கொள்ளப்பட்டது.

அதன் போது 17 பேரில் இரண்டு இலங்கை பெண்கள் மற்றும் நான்கு இந்திய ஆண்களுமாக ஆறு பேர் தங்க கட்டிகளை விழுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தங்க கட்டிகளை விழுங்கியவர்களின் தங்க கட்டிகளை மீட்க வைத்தியசாலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் , ஏனைய 09 பேர் தொடர்பிலும் சுங்க திணைக்களம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

அதேவேளை , 26 பேரில் நேற்றைய தினம் 17 பேருக்கு ஸ்கானிங் செய்யப்பட்ட நிலையில் ஏனைய 09 பேருக்கும் இன்றைய தினம் வியாழக்கிழமை ஸ்கானிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp