உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வனாதவில்லுவ பகுதியில் முந்திரி பறிக்கச் சென்றவர் சுட்டுக் கொலை..!

வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் உள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வனாதவில்லுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று (09.06.2026) அதிகாலை இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் கல்லடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கரதிவ் பகுதியில் உள்ள பெருந்தோட்ட நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரித் தோட்டத்தில் முந்திரி பறிக்கச் சென்றபோது, அங்குள்ள காவலாளிகளிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர்கள் அவரைத் தாக்கி, ஏர் ரைபிள் எனச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 8 காவலாளிகள் 4 ஏர் ரைபிள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட ஏத்தாலே, புத்தளம், கற்பிட்டி மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், வனாதவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp