மட்டக்களப்பு ரிதத்தின் இருபத்தோராவது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதியுமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரனின் ஏற்பாட்டிலும், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையிலும், மட்டக்களப்பு நியூ பயணியர் மற்றும் விசன் கெயார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடனும் இன்று புதன்கிழமை (27) விஷேட இலவச வைத்திய முகாம் மட்டக்களப்பு ரிதம் சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றது.
மாநகரசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி அமரசிங்கம் தயாசீலன் கலந்து கொண்டார்.
இதன்போது கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு கற்கைகள் பீடப் பேராசிரியர் வைத்தியர் கே.அருளானந்தம், பல்வைத்தியர் வைத்திய நிபுணர் யாழினி ஸ்ரீவதனன், பாடசாலை பற்சிகிச்சையாளர் எம்.எம்.ஐ. அகீலா, கண் பரிசோதகர்களான எம்முஜீப், எஸ்.அபிராமி உட்படப் பலர் கலந்து கொண்டு வருகை தந்தவர்களைப் பார்வையிட்டு ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.
(மட்டக்களப்பு நிருபர்)


