உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திட்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கை டிஜிட்டல் அமைப்புகள் தொடக்கிவைப்பு..!

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் (NDRSC), நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியுடனும், யுனிசெப் இலங்கை மற்றும் ஐ.நா. தன்னார்வலர்களின் ஆதரவுடனும், தனது புதிய டிஜிட்டல் இழப்பீட்டு முகாமைத்துவ அமைப்பு மற்றும் சமூக விசாரணைப் பொறிமுறையை நேற்றைய தினம் (18.05.2026) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. திட்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேகமான, மேலும் வெளிப்படையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஆதரவை உறுதி செய்வதில் இது ஒரு முக்கிய முன்னேடியாகும். இந்த டிஜிட்டல் அமைப்புகளின் தொடக்க விழா, பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர முன்னிலையில் நடைபெற்றது.

புதிய டிஜிட்டல்மயமாக்கப்பட்ட இழப்பீட்டு முகாமைத்துவ அமைப்பானது, அதிக நேரம் எடுக்கும் கைமுறை நடைமுறைகளை நெறிப்படுத்தப்பட்ட டிஜிட்டல் செயல்முறையாக மாற்றுவதன் மூலம், அரசு அதிகாரிகள் மற்றும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிர்வாகச் சுமையைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களில், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த பலருக்கு, கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்வதையோ அல்லது அரசு நிறுவனங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்வதையோ இந்த அமைப்பு நீக்குகிறது. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் கிராம அலுவலர்கள் மூலம் நிகழ்நிலை மூலம் இழப்பீட்டுக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்யலாம். இது காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, செயல்முறையை எளிமையாகவும் மேலும் திறமையாகவும் ஆக்குகிறது.

நேற்று தொடங்கப்பட்ட மற்றொரு முக்கிய அங்கமான சமூக விசாரணைப் பொறிமுறையானது, தித்வா புயல் பேரிடர் நிவாரணம், உதவித்தொகைகள் மற்றும் இழப்பீடுகள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சேவைகள் உள்ளிட்டவை தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களிடமிருந்து பெறப்படும் விசாரணைகளை முறையாக நிர்வகிக்க உதவும். இந்த விசாரணைப் பொறிமுறையானது, பாதிக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் கேள்விகளை ஒரு QR குறியீடு வழியாகவோ அல்லது வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் செயல்படும் 0716 807 807 என்ற அவசர தொலைபேசி (Hotline) எண்ணை அழைப்பதன் மூலமாகவோ நேரடியாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திடம் (NDRSC) சமர்ப்பிக்க அனுமதிக்கிறது.

ஒவ்வொரு விசாரணையும், ஒரு ஆரம்பகட்ட மதிப்பாய்வைத் தொடர்ந்து, தேவையான நடவடிக்கை மற்றும் பின்தொடர்தலுக்காக சம்பந்தப்பட்ட தேசிய அல்லது மாவட்ட அளவிலான NDRSC அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்படும். ஒரு வினவலைச் சமர்ப்பிக்கும்போது, ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு தனித்துவமான குறிப்புக் குறியீடு வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் QR குறியீடு அல்லது Qr.ndrsc.gov.lk அல்லது hotline வழியாகத் தங்கள் விசாரணைகளின் நிலையைத் தெரிந்துகொள்ள முடியும்.

இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர், அனர்த்த நிவாரண சேவைகள் பணிப்பாளர் நாயகம், சகல மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை