உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டு வந்தாறுமூலையில் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

2009 இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(18.05.2026) மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடிச்சந்தியில் வந்தாறுமூலை இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன் போது பொதுச்சுடர், விளக்குகள் ஏற்றப்பட்டும் அகவணக்கம் செலுத்தியும் இறுதியுத்தத்தில் உயிரிழந்தவர்கள் உணர்வுபூர்வமாக மலர்தூவி நினைவுகூரப்பட்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், நீர்முகபிள்ளையார் ஆலய பிரதமகுரு, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை