உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சித்தாண்டி வானவில் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிராமிய விளையாட்டு விழா..!

மட்டக்களப்பு, சித்தாண்டி வானவில் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் கிராமிய விளையாட்டு விழா இன்றைய தினம் (03.05.2026) ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த ​நிகழ்வின் ​ஆரம்பத்தில் அதிதிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டு தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம் இடம்பெற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அடுத்து ஆசியுரை, வரவேற்புரை மற்றும் தலைமையுரைகளைத் தொடர்ந்து ​தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு கலாசார விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இதன் போது சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
​இந் ​நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
மேலும், அதிதிகளாக ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மு.முரளிதரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சி.வவானந்தன், த.பிரபாகரன், கா.நாகேந்திரன், அரச அதிகாரிகள், ஆலய நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், ​சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஊர் பிரமுகர்கள்​உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிருபர்
சுமன்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp