காரைதீவு பிரதேச செயலக கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா 25.04.2026 விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் பிரதேச செயலாளர் திரு.G.அருணண் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சிவ.ஜெகராஜன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
போட்டி நிகழ்வுகளில் ஆறு கழகங்கள் பங்குபற்றி விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
காரைதீவு வரலாற்றில் JKSC ஜொலிக்கிங்கஸ் விளையாட்டுக் கழகம் 23 தங்கப் பதக்கம் பெற்று முதல் இடத்தை கைப்பற்றிக் கொண்டது.
இரண்டாம் இடத்தை KSC காரைதீவு விளையாட்டுக் விளையாட்டுக்கழகமும், மூன்றாம் இடத்தை VSC விவேகானந்தா விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டனர்.
இறுதியில் வெற்றி பெற்ற அணியினருக்கும் வீரர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன
.


What’s your Reaction?
