உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் சிவதீட்சை வழங்கும் நிகழ்வு..!

saiva scholar | Pathivu News
அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் சிவதீட்சை வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமநாத லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 22.04.2026 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் உப தலைவர் ​சைவப் புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், தீட்சா குருவாக சிவஸ்ரீ மு. கு. சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வானது சைவ சமயப் பிரசாரச் செயலாளர் சைவப் புலவர் வே. மகேஸ்வரரத்தினம் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
​ சிவதீட்சையைத் தொடர்ந்து சான்றிதழ், நித்திய அனுஷ்டான விதிப் புத்தகங்கள் வழங்கப்படுவதோடு பயிற்சிகளும் அளிக்கப்படும் எனவும் ,
​7 வயதிற்கு மேற்பட்டோர் இந்த சிவதீட்சை நிகழ்வில் பங்குபெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​தீட்சை பெற வரும்போது ஆண், பெண் இருபாலாரும் சைவ கலாசார உடையுடன் செம்புத் தாம்பாளம், பூக்கள் மற்றும் குருதட்சணை ஆகியவற்றுடன் வருமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp