உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக 2 கோடி ரூபா நிதி..!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 240 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 239 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.
மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் சீரற்ற காலநிலை காரணமாகப் பிற்போடப்பட்ட நிலையில், இந்த மாதத்தின் இறுதியில் அல்லது எதிர்வரும் மாதத்தின் ஆரம்பத்தில் அந்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
எனினும், அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படாததால், மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிக்கான திகதிகள் இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையிலேயே, இந்தப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று மீள விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் அகழ்வுத் திகதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன என்று கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp