செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்..!

vadamarachchi east | Pathivu News
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம்(10.04.2026) காலை 9 மணியளவில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கம் உறுப்பினர்களால் ஒர் கவணயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
2024 ம் ஆண்டு கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவின் போது சந்தாப்பணம் கட்டுதல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2026 ம் ஆண்டு நிர்வாக தெரிவு மிகவும் சிறப்பாக இடம் பெற வேண்டும் என்பதற்காக 2026/1/15 தொடக்கம் 2026/2/15 வரை புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கான காலம் அறிவித்தல் நோட்டீஸ் மூலம் ஒட்டப்பட்டது
அதன் அடிப்படையில் 93 உறுப்பினர்கள் சந்தாப்பணம் கட்டி வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களாக இணைந்தார்கள்.
அதன் பின்னர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் 2026.03.06 அன்று வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க புதிய நிர்வாக தெரிவு இடம் பெரும் என தெரிவிக்கப்பட்டது
பின்னர் சில மணிநேரத்தின் பின்னர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களால் தொலைபேசி மூலம் யாப்பின் படி மூன்று மாதங்களுக்கு பிறகு தான் நிர்வாக தெரிவுவு இடம் பெரும் என அறிவுத்தப்பட்டது
பின்னர் புதிதாக 42 அங்கத்தவர்கள் தாம் புதிதாக இணைவதற்கு சந்தாப்பணம் கட்டுவதற்கு தயாராக உள்ளனர் என கூறினார் அதனை நிர்வாக உறுப்பினர்களாகிய நாம் அதனை ஏற்க முடியாது என கூறினோம்
அதன் பின்னர் தாம் மூன்று மாதங்கள் காத்திருக்கும் போது புதிய அங்கத்தவர்களை இணைப்பது ஒரு குழப்பமான செயற்பாடு ஆகும்
இதனால் ஒற்றுமையாக இருந்த எமது கிராமத்தில் பல பிரச்சனைகள் வந்துள்ளது அதற்கு முழுமையான காரணமாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரே ஆவார் என போராட்ட கள் தெரிவித்துள்ளனர்.
மற்றும் இவ் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது தாம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களுக்கு கொடுப்பதற்கு கொண்டு வந்த கடிதத்தினை பிரதேச செயலாளர் அவர்களுக்கு கொடுப்பதற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது பிரதேச செயலாளர் பதில் உத்தியோகத்தரிடம் கொடுக்க சொன்ன போது பதில் உத்தியோகத்தர் குறித்த கடிதத்தினை வாங்க மறுத்தார்
பின்னர் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் சென்ற போதே குறித்த கடிதத்தினை வாங்கினார் என போராட்ட காரர்கள் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்.
Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp