வவுனியாவில் சகோதரியை கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா – சொக்கடிப்புளவு பகுதியை சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் சகோதரன் நேற்றைய தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தர்க்கப்பட்டு , சகோதரி மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
அதில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு, வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்,
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பூவரசன்குளம் பொலிஸார் , கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

What’s your Reaction?
