உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு..!

elephant incident | Pathivu News
தனது வீட்டு முற்றத்தில் வைத்து யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதன்கிழமை  அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மதியம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பகுதி மஜீத்புரம் மல்வத்தை-03 முகவரியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயான 48 வயது மதிக்கத்தக்க அபூபக்கர் சபீனா பேகம் என்ற குடும்ப பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.
மேலும் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் திருமதி எம்.எம். பாத்திமா சாமிலா கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர யானை தாக்கி உயிரிழந்த குடும்ப பெண் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு காலில் முறிவு ஏற்பட்டிருந்ததுடன் அப்பெண்ணின் வீட்டின் அருகில் யானைகள் தொகையாக வழி மாறி செல்லும் இடமாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிருபர்
பாறுக் ஷிஹான்
Pathivu News Pathivu News Pathivu News

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp