உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வரலாற்றுச் சாதனை படைத்த மாணவன் பர்தானுக்கு வாழ்த்துகள்..!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில், வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று எமது சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் எம்.எஸ்.எம். பர்தான் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்தகைய உயரிய சாதனையானது, அவரது உறுதியான இலக்கு, அயராத உழைப்பு மற்றும் தளராத தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்தச் சாதனை அவரது குடும்பத்திற்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த காத்தான்குடி மண்ணுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் தேடித்தந்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.

இவரது வெற்றி, எமது எதிர்கால இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும், நம்பிக்கையை விதைக்கும் ஊக்கமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. எம்.எஸ்.எம். பர்தான் அவர்கள் எதிர்காலத்தில் உயர் கல்வி மற்றும் சமூகப் பணிகளில் இன்னும் பல சிகரங்களைத் தொட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அவரது கல்விப் பயணம் மென்மேலும் சிறக்கவும், வளமான எதிர்காலம் அமையவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் என்றும் கிடைக்கவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்…

கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp