உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னாரில் பனைத் தோப்பில் பாரிய தீப்பரவல்..!

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்காரன்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பனைத் தோப்பொன்றில், நேற்று (31) காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. எனினும், இச்சம்பவத்தில் எவ்வித உயிர்ச் சேதங்களோ அல்லது வீடுகளுக்கோ, ஏனைய சொத்துக்களுக்கோ பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தலைமன்னார் பொலிஸார், செல்வேரி இராணுவ முகாம் இராணுவத்தினர், தலைமன்னார் கடற்படையினர் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோர் தீயணைப்புப் பிரிவினருடனும் கிராம மக்களுடனும் இணைந்து ஈடுபட்டனர்.

பல மணிநேர போராட்டத்தின் பின்னர், நேற்று(31.03.2026) மாலை 4 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீப்பரவல் காரணமாக பனை மரங்களுக்குப் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணொளி இணைப்பு : https://www.facebook.com/share/v/1AgMcsRejL/

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்