செய்திகள்

மறைந்த ஊடகச் செம்மல் சலீமிற்கு முதற்தடவையாக காரைதீவு மண்ணில் நினைவஞ்சலி..!

e0aeaee0aeb1e0af88e0aea8e0af8de0aea4 e0ae8ae0ae9fe0ae95e0ae9ae0af8d e0ae9ae0af86e0aeaee0af8de0aeaee0aeb2e0af8d e0ae9ae0aeb2e0af80 | Pathivu News
மறைந்த ஊடகச் செம்மல் சலீமிற்கு முதற்தடவையாக காரைதீவு மண்ணில் நினைவஞ்சலி..!
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கங்கத்தின் பிரதி தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம் சலீமிற்கு நேற்று சனிக்கிழமை (28.03.2026) காரைதீவில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மூன்று தசாப்த காலமாக சிரேஷ்ட ஆலோசகராகவும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்து இன,மத வேறுபாடின்றி வாழ்நாள் முழுவதும் ஊடகத்திற்காக குரல் கொடுத்து மறைந்த ஏ.எல்.எம் சலீமின் தியாகங்களை நினைவு கூர்ந்து இந் நிகழ்வு இடம்பெற்றது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் ச.லோகநாதன் தலைமையில் அவரது இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்பமாக அன்னாருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொழிற்சங்க வளர்ச்சிக்காக அமரர் ஏ.எல்.எம் சலீம் யுத்த கால சூழ் நிலை உட்பட மிக நெருக்கடியான சவால் மிக்க காலகட்டங்களில் கூட இரவு, பகல் பாராது பயணங்களை மேற்கொண்டதாகவும், துணிச்சலுடன் செயல்பட்டு பல தடைகளையும் தாண்டி தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கும் காரியங்களை நிறைவேற்ற பாடுபட்டவர்.இச் சங்கம் இன்று வரை முன்னோக்கிய பாதையில் இட்டுச்சென்று கொண்டிருப்பதில் பெரும்பங்கு இவரை சாரும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். உண்மையை ஊர்ஜிதபடுத்தி அதன் பின்னே செய்தி வெளியிடுவதில் வல்வர். ஊடத்துறையில் தற்காலத்திலும் அவருக்கு நிகர் அவரே எனவும் பெருமையாக அன்னாரை நினைவுகூர்ந்தனர் இந்நிகவில் கலந்து கொண்டவர்கள்.
சங்க தலைவர் ச.லோகநாதன் நினைவு பகிர்கையில் எமது சங்கத்திற்கு மட்டுமல்ல ஊடகத்துறை உறவுகளுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, உயிரை துச்சமாக எண்ணி சங்கத்தின் அத்தனை வளர்ச்சியிலும் உரிய சந்தர்ப்பங்களில் துணை நின்று பெருமகான் எனவும் காலத்தால் அழியாத சேவைகளை செய்து மறைந்தவரை என்றுமே நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். உயிரோடும் பல சந்தர்ப்பங்களில் கௌரவிப்புக்கள் செய்துள்ளமையால் மனநிறைவு பெறுவதாகவும் கூறினார்.அன்னாரின் ஊடகப்பயணத்தின் போது உறுதுணையாக உடனிருந்த துணைவி, பிள்ளைகளுக்கும் சங்கத்தின் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அம்பாரை மாவட்டத்தில் பல ஊடகவியலாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கியதுமட்டுமல்லாது ஊடத்துறைக்குள் ஆர்வமுள்ள பலரை அழைத்து ஊக்கப்படுத்திய பெருமைக்குரியவர். சில ஊடகவியலாளர்கள் இன்றும் அவரை எங்கள் ஊடக குருநாதர் என்று கூறுமளவிற்கு இட்டுச்சென்றுள்ளார். இன்னைய இந் நினைவு கூறலிலே இவ்விடையங்களை நன்றியுடன் பகிர்ந்து கொண்டனர் ஊடகவியலாளர்கள். அன்னாரை போன்று தற்போதுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் ஊடத்துறைக்குள் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகPathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News செயல்பட வேண்டும்.
பெருவிருட்சமாக தோள் கொடுத்து பாடுபட்ட ஏ.எல்.எம் சலீமிற்கு கண்ணீரை காணிக்கையாக்குவதோடு அன்னாரை பிரிந்து வாடும் உறவுகளுக்கும் எமது அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்
“மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்” எனும் கூற்றுக்கு இணங்க வாழ்ந்து மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம் சலீம் அவர்கள் காலத்தால் அனைவராலும் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம்.
நிருபர்
(லோகநாதன் ரிஷாந்தினி)

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp