உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதி மண்முனை பற்று தவிசாளருக்கு எதிராக வர்த்தகர்கள் எதிர்ப்பு போராட்டம்..!

e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0af81 e0ae86e0aeb0e0af88e0aeafe0aeaee0af8de0aeaae0aea4e0aebf | Pathivu News

அடிப்படை வசதியின்மையை கண்டித்து 36 ஆண்டுகளுக்கு மேலாக மலசல கூடம் அற்ற நிலையில் குடிநீர் வசதிகள் இல்லாத நிலையில் வியாபாரம் செய்வதற்கான அடிப்படை வசதிகள் போதிய அளவு இடம் இல்லாத நிலையில் இடவசதி இன்மையால் பல்வேறு கஷ்டங்களை தாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என கூறி வர்த்தக சங்கத்தினரால் இன்று (26.03.2026) காலை பாரிய எதிர்ப்பு போராட்டம் மண்முனை பற்று பிரதேச சபை முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு கஷ்டங்களை தாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை நிவர்த்தி செய்து தருமாறு பலமுறை தவிசாளர் இடம் தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதன் காரணமாக பொதுச் சந்தை வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் பல்வேறு அசோகாரியங்களை எதிர்நோக்க வேண்டி இருந்தமை காணக்கூடியதாக இருந்தது.

​பின்னர் போராட்டக்காரர்கள் ஆரையம்பதி பொதுச்சந்தையிலிருந்து மண்முனை பற்று பிரதேச சபை வரை நடை பேரணியாக கோஷங்கள் எழுப்பி பிரதேச சபை வரை சென்றடைந்து பிரதேச சபை முன்னால் வியாபார உரிமையாளர்கள், வியாபாரிகள் ஒன்று திரண்டு பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

அங்கு ஒன்று திரண்ட வியாபார உரிமையாளர்கள் வர்த்தகர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மண்முனை பற்று பிரதேச செயலாளர் ரோகினி விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது செயலாளர் எந்தவித சாதகமான பதிலை தெரிவிக்காத நிலையில் போராட்டக்காரர்கள் இதைவிட நாளை பாரிய போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து அங்கிருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊