உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரி நகரசபைத் தவிசாளரின் வேண்டுகோள்..!

e0ae9ae0aebee0aeb5e0ae95e0ae9ae0af8de0ae9ae0af87e0aeb0e0aebf e0aea8e0ae95e0aeb0e0ae9ae0aeaae0af88e0aea4e0af8d e0aea4e0aeb5e0aebfe0ae9a | Pathivu News

இக்கட்டான நிலைமையில் மக்கள் சமுகப் பொறுப்புடன் செயற்பட்டு மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

உலக நாடுகள் அனைத்தும் தற்போது நிலவி வருகின்ற யுத்த நிலைமை காரணமாக பொருளாதார நெருக்கடி நிலைமைக்குள் சிக்கியுள்ளன.அதற்கு எமது நாடு விதிவிலக்கல்ல.
இலங்கை மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் தொடர்ச்சியாக கோரி வருகின்றது.

தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற்கொண்டு சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.பகல் வேளைகளிலும் தேவையின்றி ஒளிர்கின்ற தெரு விளக்குகளை அணைத்து மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும்.

அத்துடன் தெரு விளக்குகள் ஓய்வின்றி பகல் வேளையிலும் ஒளிர்வதால் அதனுடைய பயன்பாட்டு காலம் பாதியாக குறைவடைகின்றது.
பின்னர் பழுதடைந்த தெருவிளக்கை மாற்ற அதிக பணம் செலவிட வேண்டி ஏற்படுகின்றது,மின்சாரசபை ஊழியர்களுக்கும் பெருமளவான நிதி ஒதுக்கியே தெரு விளக்குகளை மாற்றுகின்றோம். இதனால் மக்களுடைய வரிப்பணமே வீணாகின்றது. இதனை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp