உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் இடமாற்றம் வேண்டாம்..!

e0aeaee0af87e0aea9e0af8de0aeaee0af81e0aeb1e0af88e0aeafe0af80e0ae9fe0af8de0ae9fe0af81 e0aeaae0aea4e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af81 | Pathivu News

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் தம்மை பழைய நிலையங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் வடமாகாண பொது சேவை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை(26.03.2026) சில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்ட சில ஆசிரியர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மேன் முறையீடுகள் செய்துள்ளனர்.

இதனால் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் , வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 01.01.2026 ஆம் திகதியன்று வழங்கவென பட்டியலிடப்பட்ட இடமாற்றங்கள் இதுவரை ஒருசிலரது சுயநலன்களுக்காக இடமாற்றம் அமுல் படுத்தப்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றது இதனால் வெளிமாவட்டங்களில் 08 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் இடமாற்ற பட்டியலின் அடிப்படையில் தமக்கான இடமாற்றத்தை விரைந்து செய்யுமாறு கோரி கடந்த 24ஆம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம் நடாத்தி இருந்தனர்.

அதனை அடுத்து இன்றைய தினம் வியாழக்கிழமை இடமாற்ற பட்டியலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மேன் முறையீடு செய்துள்ள ஆசிரியர்கள் , அதற்கான பதில் வரும் வரையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp