உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்..!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாக நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல்.பிரதீப் பியதர்ஷன பெரெரா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர்.

நாட்டில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்ட தினமாக நேற்று முன் தினம் பதிவதானது. நேந்றைய மின்சாரத் தேவையானது 3,089 மெகாவோட் ஆகப் பதிவாகியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரை மின்சாரத் தேவையானது தொடர்ந்து 3,000 மெகாவோட் அளவிலேயே பதிவாகி வருகின்றது.

அன்றைய தினம் 60.56 ஜிகாவோட் மணித்தியால மின்சாரம் நுகரப்பட்டுள்ளதுடன், தற்போது அது 58-59 ஜிகாவோட் மணித்தியால மட்டத்தில் காணப்படுகிறது.

வறட்சி வானிலை மற்றும் எரிபொருள் சவால்கள் நிலவிய போதிலும், மின்சார உற்பத்திக்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது.

இதன் காரணமாக நாட்டில் தற்போது மின் தடை எதனையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பொதுமக்களுக்குத் தடையற்ற மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் பொதுவாக வறட்சியான வானிலை நிலவும் காலப்பகுதியாகும்.

மின்சாரத் தேவை அதிகரித்து வருவதால், நாட்டின் நலன் கருதி மக்கள் மின்சாரத்தை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அனைத்து நுகர்வோரிடமும் நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல்.பிரதீப் பியதர்ஷன பெரெரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp