தெட்ஷணகைலாசம் எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஸவத் திருவிழா நேற்றைய தினம் (22.03.2026) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
கொடியேற்றம் (துவஜாரோகணம்) (22.03.2026) காலை 8.00 மணிக்கு அம்பாளின் திருவருளுடன் இடம்பெற்றது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பார்.
இரதோற்சவம் (தேர்த்திருவிழா) 31.03.2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெறும். 01.04.2026 அன்று உதயத்தில் தீர்த்தோற்ஸவமும், அன்று இரவு கொடியிறக்கமும் (துவஜ அவரோகணம்) நடைபெறும். 02.04.2026 அன்று பூங்காவனத் திருவிழாவுடன் மஹோற்சவம் நிறைவுபெறும்.
மஹோற்சவ காலங்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெறவுள்ளன. காலை: 5.30 மணிக்கு அபிஷேகம், 7.00 மணிக்கு மூலஸ்தான பூஜை, 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை,
மாலை 2.30 மணிக்கு அபிஷேகம், 3.30 மணிக்கு மூலஸ்தான பூஜை, 5.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை மற்றும் தினமும் மாலை 6.00 மணிக்கு அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளிப்பார்.
இந்த மஹோற்சவ காலங்களில் அம்பாளின் அருளைப் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் அடியார்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்


