இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்;
வடக்கு மாகாண பாடசாலைகளில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் சைவம், கிறிஸ்தவம் ஆகிய இரு மதங்களை பின்பற்றுபவர்களாக இருக்கும் நிலையில்,
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வடக்கு மாகாண சபையின் கல்வி நிர்வாகத்துக்குப் பொறுப்பான மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் கே.ஜே.பிரெட்லி அவர்களின் கையொப்பத்துடன் கட்டகலவில் உள்ள The Gideons International என்ற அமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் ஏப்ரல் 23ஆம், 24ஆம், 25ஆம், 26ஆம், 27ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு நேரில் சென்று பைபிள் விநியோகிக்க அனுமதிக்கப்படவேண்டும் என்ற வகையில் ஊடகங்களில் வெளியாகியுள்ள கடிதம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி கடிதத்தில் யாழ்.மாவட்டத்தில் தென்மராட்சியும், வடமராட்சியும் தனித்து குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் ஐயத்தை ஏற்படுத்துகின்றது.
வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலை மாணவர்களுக்கும் பைபிள் வழங்குவதற்கு எடுக்கும் நடவடிக்கை திட்டமிட்டு மதம் மாற்றும் முயற்சியா என்று எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் வடக்கு மாகாணத்தில் அதிகம் சைவ மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் இவ்வாறான முயற்சி பல ஐயத்தை தோற்றுவித்துள்ளது.
அரச பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் நேரில் சென்று பைபிள் வழங்குவதன் ஊடாக மாகாண சபையின் கல்வி திணைக்கள உயர் அதிகாரியே தனது பதவியை தவறாக பயன்படுத்தி அதற்கு இவரும் உடந்தையாக இருகிறாரா என நாம் மிகுந்த கவலையடைகிறோம்.
சமீபகாலத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகள் மாணவர்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் சிக்கல்கள் எல்லையற்றவை. உதாரணமாக நவராத்திரி காலத்தில் கல்வித் திணைக்களப் பரீட்சைகளை நடாத்துவது, சைவ சமயம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள்களில் அதற்கு பொருத்தமில்லாத வேறு விடயங்களை மாணவர்களுக்கு வலியுறுத்துவது போன்ற செயல்கள் தொடர்கிறது என பல பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த விடயம் தொடர்பாக வடமாகாண சபையின் ஆளுநர் நேரில் தலையிட்டு விசாரணை நடத்தவேண்டும். மேலும் விசாரணையில் இது திட்டமிட்டு செய்யப்பட்டு இருந்தால் குறித்த கல்வி அதிகாரி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு நேர்மையான ஒருவர் அதற்கு நியமிக்கப்பட வேண்டும். அத்துடன் இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெறாமல் இருக்க கல்வித்துறையுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் இறுக்கமான அறிவுத்துத்தல்களை வழங்கவேண்டும் என வடமாகாண சபையின் ஆளுநர் அவர்களை இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கேட்டுக்கொள்கின்றது.என மேலும் அவர்கள் தமது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
