உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் எரிபொருள் இறக்குமதி தொடர்பில் வெளியாக முக்கிய தகவல்..!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் ஒன்று, எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா துறைமுகத்திலிருந்து நேற்று (4) இரவு புறப்பட்ட இந்தக் கப்பல், தற்போது இலங்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

மத்திய கிழக்கில் சவால்கள் நிலவினாலும், இலங்கைக்கு மசகு எண்ணெயைத் தடையின்றி கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான முழுமையான கொள்ளளவு மற்றும் வசதிகள் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக தலைவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை