ஈழம்

தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரியம்..!

e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aeaae0aea3e0af8de0aeaae0aebee0ae9fe0af8de0ae9fe0af81 e0aeaae0aebe | Pathivu News

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல..!
உண்ணும் உணவு தானியங்களில் நவதானியங்கள் என்று ஒன்பது தானியங்களை நிர்மாணித்தான்

தானியங்களுக்கு அதிபதியாக நவக்கிரகங்கள் என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தான்
நெல் சந்திரன்
கோதுமை சூரியன்
துவரை செவ்வாய்
பாசிப்பயறு புதன்
கொண்டைக்கடலை குரு
மொச்சை சுக்கிரன்
எள் சனி
உளுந்து ராகு
கொள்ளு கேது

நவதானியங்கள் ஒன்பது என நிர்மாணித்த தமிழன் திசைகளை எட்டாக பிரித்தான்
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன் இசையை ஏழாக கொடுத்தான்.
ச ரி க ம ப த நி
இசையை ஏழாக கொடுத்த தமிழன்
சுவையை ஆறாக பிரித்தான்.

இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு
உவர்ப்பு
துவர்ப்பு
சுவையை ஆறாக பிரித்த தமிழன்
நிலத்தை ஐந்தாக பிரித்தான்.

குறிஞ்சி (மலைப்பகுதி)
முல்லை ( வனப்பகுதி)
நெய்தல் ( கடல் பகுதி)
மருதம் ( நீர் மற்றும் நிலம்)
பாலை ( வறண்ட பகுதி)

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்

காற்றை நான்காக பிரித்தான்.

தென்றல்
வாடை
கோடை
கொண்டல்

கிழக்கிலிருந்து வீசும் காற்று
கொண்டல்

தெற்கிலிருந்து வீசும் காற்று
தென்றல்

மேற்கிலிருந்து வீசும் காற்று
கோடை

வடக்கிலிருந்து வீசும் காற்று
வாடை

காற்றை நான்காக பிரித்த தமிழன்
மொழியை மூன்றாக பிரித்தான்.

இயல் ( இயற் தமிழ் )
இசை ( இசைத்தமிழ்)
நாடகம் ( நாடகத்தமிழ்)

இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது.

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்.

அகம்
புறம்

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை.

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம்
புற வாழ்க்கை.

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்.

ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான்’
அதை
உயிரினும் மேலாக வைத்தான்.

இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்

” ஒழுக்கம் விழுப்பந் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் ”

அதை கடைபிடித்து வாழ உடலை காத்திட யோகாவை உருவாக்கினான்.

You may also like

e0ae9ce0af86e0aea9e0af80e0aeb5e0aebe e0aea8e0af8be0ae95e0af8de0ae95e0aebf e0ae88e0aeb0e0af81e0aeb0e0af81e0aeb3e0aebfe0aeaae0af8d | Pathivu News
உலகம் ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஜெனீவா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்..!

பிரித்தானியாவில் இருந்து மனித உரிமை அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனிவா
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp