புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சிறிதரன் எம்பி அஞ்சலி..!

சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நல்லகண்ணு (வயது 101) உடல்நலக்குறைவால் நேற்று புதன்கிழமை (25.02.2026) காலமானார். இந்நிலையில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவுக்கு அரசியல்வாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழகத்துக்குச் சென்று, நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்