முக்கிய செய்திகள் உலகம் புதியவை

பாழடைந்த கட்டடத்தில் சட்டத்தரணி செய்த கேவலமான செயல்..! அதிரடியாக கைது செய்த பொலிஸார்

e0aeaae0aebee0aeb4e0ae9fe0af88e0aea8e0af8de0aea4 e0ae95e0ae9fe0af8de0ae9fe0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae9ae0ae9fe0af8d | Pathivu News

கொழும்பு, வாழைத்தோட்டம் காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த சட்டத்தரணி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாஞ்சியாரச்சி மாவத்தை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் வைத்து சட்டத்தரணி கைது செய்யப்பட்டார். இதன்போது சட்டத்தரணியிடம் இருந்து ‘ஐஸ்’ ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

1996 ஆம் ஆண்டு சட்டத்தரணியாகப் பதவியேற்ற இவர், புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp