சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி மாசி மாதம் 2026 அன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணிவரை இலவச சட்ட ஆலோசனை செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது .
இதன்போது சட்ட ஆலோசனை தேவைப்படுபவர்கள் வருகை தந்து சட்டத்தரணிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு இலவசமாக சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சட்ட ஆலோசனை தேவைப்படும் விடயம் தொடர்பான ஆவணங்கள் ஏதும் இருப்பின் அவற்றை எடுத்து வரும்படியும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகள்,பாலியல் மற்றும் பால்நிலை தொடர்பான பிரச்சனைகள்,காணிப் பிணக்குகள்,பொருளாதார உரிமைகள்,சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகள்,விசேட தேவையுடையோர் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் திருநர் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இலவச சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
