ஈழம் உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை கடற்படையால் கட்டைக்காட்டில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் நினைவேந்தல்..!

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0ae95e0ae9fe0aeb1e0af8de0aeaae0ae9fe0af88e0aeafe0aebee0aeb2e0af8d e0ae95e0ae9fe0af8de0ae9fe0af88 | Pathivu News

சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 32ஆம் ஆண்டு நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நேற்று(18.02.2026) மாலை 04.00மணியளவில் ஆரம்பமாகியது.

சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்காலில் (18.02.1994) அதிகாலை, கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையின் டோரா படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 கடற்றொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்

மேற்படி கடற்றொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தலில் முதல் நிகழ்வாக படுகொலையை நினைவுகூரும் விதமாக அமைக்கப்படவுள்ள நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து மலர் மாலையினை உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் அணிவிக்க பொதுச் சுடரும் உயிரிழந்த மீனவர் ஒருவரின் தந்தையால் ஏற்றப்பட ஏனைய சுடர்களை சம நேரத்தில் உறவுகள் ஏற்றிவைத்தனர்.

அத்துடன் மலர் அஞ்சலியை வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் ஆரம்பித்துவைக்க அதனை தொடர்ந்து விருந்தினர்கள்,உறவுகள்,பொது மக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வில் கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன்,அருட்கலாநிதி ரமேஷ் அடிகளார்,அருட்சகோதரன் ஜெனிஸ்ரன்,வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன்,பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ்,காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன்,சிரேஷ்ட ஊடகவியலாளர் காண்டிபன்,சண்டிலிப்பாய் பிரதேச சபை உப தவிசாளர் தயாபரன்,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வசந்தன்,பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Pathivu News Pathivu News Pathivu News Pathivu NewsPathivu NewsPathivu News

 

 

 

 

 

 

 

 

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp