உள்ளூர் செய்திகள்

மண்ணின் உரிமை மீட்போம்! விகாராதிபதியுடன் கைகோர்த்த மக்கள் எழுச்சி கட்சி

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தொடர்பான பிணக்குகளுக்கு 70 சதவீத தீர்வு எட்டப்படும் சாத்தியம் உள்ளதாக அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று நயினாதீவு நாகதீப விகாராதிபதியை நேரில் சந்தித்த அவர், காணி உரிமையாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கையளித்தார்.

தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிக்கு ஈடாக, அதே அளவிலான மாற்று நிலத்தை விகாரைக்குச் சொந்தமான இடத்திலிருந்து உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் வழங்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட விகாராதிபதி, மாற்று நிலத்தை வழங்க சம்மதம் தெரிவித்தார். எனினும், தையிட்டியில் தற்போது விகாரை அமைந்துள்ள காணியை, அதன் உரிமையாளர்கள் நாகதீப விகாரையின் பெயரில் முறையாக எழுதித் தர வேண்டும் என்ற நிபந்தனையை அவர் முன்வைத்துள்ளார்.

இந்த இணக்கப்பாட்டைத் தொடர்ந்து, விகாராதிபதியின் நிபந்தனைக்கு அமைவாக
கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நகர்வுகளின் மூலம் தையிட்டி காணிப் பிரச்சினைக்கு 70 சதவீத தீர்வு சாத்தியமாகியுள்ளதாகவும், இதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் அருள் ஜெயந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp