யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைகள் தலைமையகத்தை மாற்ற எந்தத் திட்டமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விடயத்தைச் சுற்றி ஆதாரமற்ற மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற விமானபபடை துணை மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார்
இத்தகைய கற்பனைச் செய்திகள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் அமைதிக்கேடையும் உருவாக்குகின்றன என்றும், அது தேசிய நிலைத்தன்மைக்கு பாதகமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்டு இவ்வாறான தவறான தகவல்களை பரப்பும் முயற்சிகளை பாதுகாப்பு செயலாளர் கண்டித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் மீண்டும் தெரிவித்தார்.
