உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடல் நாளை நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பு மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலாளரகத்தில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக பாடசாலை ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் குழுவொன்று தொடங்கியுள்ள போராட்டம் இன்று எட்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டித் தேர்வில் தோன்றாமல் தங்களை நேரடியாக ஆசிரியர் சேவையில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஒழுங்கற்ற முறையில் நியமனம் பெற்ற பட்டதாரிகள் என விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
