மனித வாழ்வியல் நெறிகளை முற்றிலும் எடுத்துரைக்கும் திருக்குறள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடும்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்
குறிப்பாக, ஐசக் நியூட்டனின் மூன்றாம் விதியை திருவள்ளுவர் பல நூற்றாண்டுகள் முன்பு குறளின் மூலம் விளக்கியுள்ளார்: ‘பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்’ எனச் சொல்வது, ஒருவரின் செயல் எதிர்பலத்தை அறிவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறது.
மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் இணைந்து ஏற்பாடு செய்த ‘மனித மாண்பு’ என்ற 7வது சர்வதேச திருக்குறள் மாநாட்டின் முதலாம் நாள் நிகழ்வு இன்று வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் ஆளுநர், இந்தியத் துணைத்தூதரகக் தூதுவர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளது, மேலும் பல்வேறு நாடுகளிலிருந்து பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
ஆளுநர் தெரிவித்தபடி, அறநெறியில் வாழும் மனிதன் வானுலகில் உள்ள தெய்வத்துடன் இணையாகப் போற்றப்படுவான் என்பது போன்ற உயரிய மனித மாண்புகளைப் போற்றும் திருக்குறள் மாநாடு வடக்கு மாகாணத்தில் நடைபெறுவது பெருமைமிக்க நிகழ்வாகும் என தெரிவித்துள்ளார்

