பெண்கள் இரவு பணியில் ஈடுபடுவது தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள் குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட பெண் சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் உணவுச் சேவைத் துறையில் பணிபுரியும் பெண்கள் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பணியாற்றுவது தொடர்பாக இந்த ஒழுங்குகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வர்த்தமானி அறிவிப்பு தொழிலாளர் அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பணியாளர்கள் இரவு பணியில் ஈடுபடும் நேரங்களில் அல்லது பணி முடிந்த பின்பு, அவர்களின் இருப்பிடத்துக்கு செல்ல ஏற்ற தங்குமிடம் அல்லது போக்குவரத்து வசதிகளை வேலைவாய்ப்பு வழங்குநர் ஏற்பாடு செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இப்பணியாளர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் பொது நலன் தொடர்பான பொறுப்பும் வேலைவாய்ப்பு வழங்குநரிடமே இருப்பதாக இந்த புதிய ஒழுங்குவிதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
