உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நிலக்கரித் தரம்: சிக்கலும் தீர்வும் இதோ

நடப்பில் உள்ள நீண்டகால நிலக்கரி தரக் குறைபாடுகள் காரணமாக நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ஏற்படக்கூடிய பற்றாக்குறையை சமாளிக்க 300,000 மெட்ரிக் டன் நிலக்கரியை அவசர கொள்முதல் முறையில் பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அவசியம் ஏற்பட்டாலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடையே மட்டுமே டெண்டர் அழைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் இந்த வாரமே நடைமுறை தொடங்கும் என்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தரம் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தாலும், இலங்கை நிலக்கரி நிறுவனம் அல்லது அமைச்சகம் இதுவரை நீண்டகால ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை.

ட்ரைடெண்ட் கெம்ப்ஃபார் லிமிடெட் நிறுவனத்திற்கு 2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரை 1.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்