கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஆய்வு செய்து இறுதி முடிவை பெப்ரவரி 3 ஆம் திகதி எடுக்கவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி பரிந்துரைத்துள்ள நபரின் பெயர் ஐந்தாவது முறையாக அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில் இறுதி தீர்மானம் எடுக்க அரசியலமைப்பு சபை இன்று கூடவிருந்தாலும், அந்த முடிவு அடுத்த செவ்வாய்க்கிழமைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
‘ஜனாதிபதி புதிய பெயரை சமர்ப்பித்துள்ளார். அதை உறுப்பினர்கள் ஆராய்வதற்கு சில காலம் தேவைப்படுகிறது.
எனவே, பாராளுமன்றம் கூடும் அதே நாளான பெப்ரவரி 3 ஆம் திகதியே இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும்,’ என அமைச்சர் பிமல் ரத்நாயக்க் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்
