உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

2025 ல் இலங்கைக்கு வருவாயில் சாதனை- மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கையின் நடப்பு கணக்கு 2025 ஆம் ஆண்டில்; 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான இடைக்கால மேலதிகத்தைக் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2025 டிசம்பர் மாதத்திலும் சிறிய அளவிலான மேலதிகம் பதிவாகியதுடன், கடந்த ஆண்டின் பெரும்பாலான மாதங்களிலும் மாதாந்திர மேலதிக நிலை காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

ஏற்றுமதி வருவாய் வரலாற்றிலேயே உயர்ந்த அளவை எட்டியிருந்தபோதிலும், பொருட்கள் வணிக பற்றாக்குறை அதிகரித்து 2025 ஆம் ஆண்டுக்கான மொத்தம் சுமார்; 7.9 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

வாகன இறக்குமதி மட்டும் 2.05 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததுடன், டிசம்பர் மாதத்திலேயே 301 மில்லியன் டொலர் மதிப்பிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதி விலைகள் இறக்குமதி விலைகளைவிட வேகமாக குறைந்ததால், வர்த்தக நிபந்தனைகள் சற்றே மோசமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சேவைகள் கணக்கில் டிசம்பர் மாதத்தில்; 344 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேலதிகம் பதிவானது.
இதன் மூலம் 2025 ஆம் ஆண்டுக்கான மொத்த சேவைகள் கணக்கு மேலதிகம் 3.7 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வருகை வருடாந்திர அடிப்படையில் 15.1 சதவீதம் உயர்ந்து 2018 நிலையை விட மேலெழுந்திருந்தாலும், வருமானம் 1.6 சதவீதம் மட்டுமே அதிகரித்து 2018 அளவை விட குறைந்த நிலையில் தொடர்ந்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றம் 2025 ஆம் ஆண்டில் 8 பில்லியன் டொலரை கடந்துள்ளதுடன், 2024 ஆம் ஆண்டை விட 22.8 சதவீத உயர்வை பதிவு செய்து சாதனை அளவை எட்டியுள்ளது.

பல்தரப்பு நிதி வரவுகளும் வெளிநாட்டு நாணய கொள்முதல்களும் காரணமாக, 2025 இறுதிக்குள் மொத்த அரச உத்தியோகபூர்வ கையிருப்பு சுமார் 6.8 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் பெறுமதி குறைந்திருந்த இலங்கை ரூபாய், 2026 ஜனவரியில் அமெரிக்க டொலருக்கு எதிராக 0.2 சதவீதம் மதிப்பேற்றம் கண்டதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp