நாட்டில் குழந்தைகளின் உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் 2025ஆம் ஆண்டு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
இதில் 8,514 முறைப்பாடுகள் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை பரிசீலனையில் உள்ளதாகவும், 1,941 சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாடுகளில் 545 பாலியல் தொல்லை சம்பவங்கள், 231 கடுமையான பாலியல் தவறுகள், 38 வல்லுறவு சம்பவங்கள், 9 சிறுவர் திருமணங்கள், மற்றும் 150 இணையத் தொல்லை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும், 79 பேர் கர்ப்பமாகியமை பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு 20 குழந்தைகள் உயிர் மாய்ப்பு முயற்சி மேற்கொண்டனர்.
ஏனைய முறைப்பாடுகள் குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் இல்லாமை மற்றும் 5 வயது கீழ் குழந்தைகள் தமது பெற்றோர்கள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்ததால் ஏற்பட்ட முறைப்பாடுகள் ஆகும்.
இந்த தரவுகள் நாட்டில் குழந்தைகளின் பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் அவசியத்தை உணர்த்துகிறது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது .
