2026ஆம் ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. இதனுடன் தொடர்புடைய புதிய கல்வி மறுசீரமைப்புகளும் இன்றிலிருந்து அமுலுக்கு வருகிறது.
புதிய கல்வி மாற்றங்களின் தொடக்க நிகழ்ச்சி இன்று அத்துறுகிரியா குணசேகர வித்யாலயத்தில் நடைபெறவுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர சேனவிரத்ன தெரிவித்தார்.
இந்த நிகழ்வு பிரதமர் கலதநிதி ஹரிணி அமரசூரியாவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கல்வி மறுசீரமைப்புகள் அமல்படுத்தப்படும் செயல்முறையில் எவரும் அநியாயமாக நடத்தப்படமாட்டார்கள் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா வலியுறுத்தியுள்ளார்.
காலி பகுதியில் குறைந்த வருமானம் பெறும் 250 குடும்பங்களுக்கு வீடமைப்பு உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
கல்வி துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், அது சமநீதியையும் சமவாய்ப்பையும் பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
