பணமில்லா பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் அடையாளம் தொடர்பான நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
கிராமப்புற மக்களின் பொருளாதார செயற்பாடுகளை முறையாக பதிவு செய்து சட்டப்பூர்வமாக்குவதறகு முக்கிய முன்னுரிமை என ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்குப் பொறுப்பான அமைச்சருமான அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கையை பணமில்லா பொருளாதாரமாக மாற்ற அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் விரிவாக ஆராயப்பட்டது.
2025ஆம் ஆண்டில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் 2026ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அரசு நிறுவனங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவது கியூவ் . ஆர். குறியீடு மூலம் பணப்பரிவர்த்தனைகளை விரிவுபடுத்துவதுஇ தேசிய கிளவுட் கட்டமைப்பு மையம் அமைப்பதுஇ அதிவேக இணைய சேவையை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதுஇ ஒரே சாளர டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்துவதுஇ டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் அபராதக் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தும் நடைமுறைகள் குறித்தும் விரிவாக பரிசீலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
