அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
எதிர் வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இந்த தீர்மானம் இன்று (நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் தன்மை மற்றும் அதற்கான கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
