உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தொகுப்பில் ஆபாச இணையதள இணைப்பு விசாரணை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

e0ae86e0aeb1e0aebee0aeaee0af8d e0aeb5e0ae95e0af81e0aeaae0af8de0aeaae0af81 e0ae86e0ae99e0af8de0ae95e0aebfe0aeb2 e0aeaae0aebee0ae9f 2 | Pathivu News

ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தொகுப்பில் ஆபாச இணையதள இணைப்பு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், தேசிய கல்வி நிறுவனம் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து விசாரணை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் தலைமையகத் தகவல்களின்படி, தேசிய கல்வி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் உட்பட ஆறு பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கல்வி நிறுவத்தின் கல்வி விவகாரப் பிரிவுடன் இணைந்து பாடத்தொகுப்பை தயாரித்த எழுத்தாளர்கள், அதனை பரிசீலனை செய்தவர்கள், தொகுத்தவர்கள் மற்றும் சரிபார்த்த அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

இதனிடையே, தேசிய கல்வி நிறுவனத்தின் பாடத்தொகுப்பு தயாரிப்பு நடைமுறை தொடர்பாக தனியான ஆரம்ப விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விசாரணையை ரஞ்சித் ஆரியரத்தின தலைமையிலான குழு முன்னெடுத்து வருவதாகவும், இரு விசாரணைகளின் அறிக்கைகளும் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கல்வி துணை அமைச்சர் டாக்டர் மதுர சேனேவிரத்ன, தேசிய கல்வி நிறுவனத்தில் பாடத்தொகுப்பு தயாரிப்பு செயல்முறையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாடப்பிரிவு நிபுணர்கள் அடங்கிய குழுவின் வழிகாட்டுதலுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், ஜனவரி 16ஆம் திகதி தேசிய கல்வி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.

விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் துணை அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததனைத் தொடர்ந்து, விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனினும், அவரது பொறுப்புகள் நிர்வாக ரீதியிலேயே இருந்ததனால், இதுவரை அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp