ராகம போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
தனது 63 ஆவது வயதில் காலமான நந்தன குணதிலக்க, 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி பாணந்துறையில் பிறந்தார்.
1982 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி சார்பில் போட்டியிட்டார்.
நீண்டகாலம் அக்கட்சியின் நிர்வாகச் செயலாளராகவும் கடமையாற்றினார்.
பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து பாணந்துறை நகர சபையின் தலைவராக சேவையாற்றிய அவர், 2009 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை அமைச்சராகவும், தபால் மற்றும் தொலைத்தொடர்பு பதில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
இவரது மறைவு அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
