உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எலோன் மஸ்க் Grok-ஐ பெண்கள் பாதுகாப்புக்காக மாற்றுகிறார்: ஆபாசப்பட மாற்றம் நிறுத்தம்!

e0ae8ee0aeb2e0af8be0aea9e0af8d e0aeaee0aeb8e0af8de0ae95e0af8d grok e0ae90 e0aeaae0af86e0aea3e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaae0aebee0aea4 | Pathivu News

கீழ் வரும சமீபத்தில், எலோன் மஸ்க் தலைமையிலான ஏ.ஐ. கருவியானது கிராக்க் ஊடாக பெண்கள் படங்களை ஆபாசமாக காட்டும் வகையில் மாற்றம் செய்யும் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.

இது பல்வேறு நாடுகளில் சட்ட விரோதமாக இருக்கும் வகையிலும், பெண்கள் மீது செய்யப்பட்ட பாலியல் தாக்குதலாக கருதப்பட்டது.

இந் நிலையில் எக்ஸ் நிறுவன அறிவிப்பில், கிராக்க் கணக்கில் உண்மையான மனிதர்களின் படங்களை மாற்றுவதை தடுக்கும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறப்பட்டது.

இங்கிலாந்து அரசு இதை ‘வாழ்த்துக்குரிய முன்னேற்றம்’ என வரவேற்ற போதும் தொலைத்தொடர்பு ஆணைய அலுவலகத்தின் விசாரணை தொடரும் என்று தெரிவித்தது.

பல பெண்கள் அமைப்புக்கள் ஏற்கனவே பல பெண்களின் ஒளிப்படங்களை இந்த தொழில்நுட்ப்பததை பயன்படுத்தி சிலர் ஆபாசமாக காட்டி பெண்களின் மனநிலையில் தாக்கததை ஏற்படுத்தியதாக ; குற்றம் சாட்டினர்.

கார்டிஃப் பல்கலைக்கழக தத்துவக் கலை பேராசிரியர் கலாநிதி டெய்ஸி டிக்சன், கிராக்க் மூலம் தனது படங்களை மாற்றியதில் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, அவமதிப்பு ஆகிவற்றை பகிர்ந்ததுடன் பாதுகாப்பான சூழல் இல்லாத ஓரு அச்ச நிலையேற்பட்டதாக தெரிவித்துள்ளார்

அவர், ‘இந்த ஏ.ஐ. தீங்கு ஒருபோதும் நிகழாமல் இருக்கவேண்டும்’ என வலியுறுத்தினார்.

கிராக்க் இன் புதிய மாற்றங்கள், கிராக்க்-ஐ பயன்படுத்தி சட்டம் மீறும் முயற்சிகளை தடுக்கும் விதமாக, செயல்பாட்டை பகுதி பகுதியாய் கட்டுப்படுத்தும் முறையையும் சேர்க்கின்றன.

எலோன் மஸ்க், கிராக்க் இனி நிஜ மனிதர்களின் படங்களை மிக குறைந்த உடையில் மாற்ற முடியாது என்பதை உறுதி செய்யும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp