கொழும்பு காலி முகத்திடல் மத்திய வீதியில், மின்கம்பத் தூணில் ஏறி ஒருவர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.
களனிய பொலிஸாரால் தன்னை அநியாயமாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி இந்தப் போராட்டத்தை அவர் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையின் குழுவினரும் விரைந்து சென்றுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவசியமான மருத்துவ உதவிகளை வழங்குவதற்குமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

