உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புயலும் பசியும் பிணையும் நிலையில் – 11 இலட்சம் மக்களுக்கு அவசர ஆதாரம் தேவை-FAO

இலங்கையில் ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பு நடவடிக்கைகள், வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1 கோடியே 65 இலட்சம் அமெரிக்க டொலர் சர்வதேச உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த புயல் நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ளதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் 22 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 11 இலட்சம் பேர் உடனடி உணவு, விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து உதவியை அவசரமாக தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

2025ஃ26 பெரும் போக பயிர்ச் செய்கை காலப்பகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி துறைகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இது நீண்டகால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.

உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விதைகள், உரங்கள் பற்றாக்குறை, சேதமடைந்த நீர் பாசன கால்வாய் அமைப்புகள் காரணமாக திரும்பப் பெற முடியாத இழப்புகள் ஏற்பட்டு, நாட்டின் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடையும் என உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp